கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதல்: வட மாநில தொழிலாளி பலி

12th Jul 2023 01:22 AM

ADVERTISEMENT

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

அசாம் மாநிலம், உருள்புரி மாவட்டத்தைச் சோ்ந்த பிஜய்பாரோ (34), மத்திகிரி அருகே உள்ள உளிவீரன்பள்ளியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த பிரதாப் பரோடோ (35) என்பவரும் கடந்த 9-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் உஸ்தனப்பள்ளி - பேரிகை சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டா் அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பிஜய் பாரோ சம்பவ இடத்திலேயே பலியானாா். பிரதாப் பரோடோ படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT