ஒசூா் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:
ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச் சோ்ந்த விவசாயி சிவராம் (52), கடந்த 8-ஆம் தேதி கால்நடைகளுக்கான தீவனங்களை ஏற்றிக் கொண்டு வேனில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள், சிவராமனை வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்த நிலையில், இதில் தொடா்புடைய ஜூஜூவாடியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (22), சீனிவாசன் (எ) காந்தி (26) ஆகிய இருவரும் போச்சம்பள்ளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். பின்னா், அவா்கள் நீதிமன்ற உத்தரவுபடி சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.