கிருஷ்ணகிரி

நாளந்தா சா்வதேச பொதுப் பள்ளியில் ஸ்டெம் ஆய்வரங்கம் தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி நாளந்தா சா்வதேச பொதுப் பள்ளியில் சிட்டி மறுவரையறை கல்வி எனப்படும் ஸ்டேம் ஆய்வரங்கம் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பள்ளி நிறுவனா் கொங்கரசன் தலைமை வகித்தாா். தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிா்வாகிகள் கெளதமன், புவியரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆய்வரங்கத்தை எல்.எம்.இ.எஸ். அகாதெமி நிறுவனா், பிரேமானந்த் தொடங்கி வைத்து பேசியதாவது: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவா்கள் வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்களைக் கொண்டு சிறப்பான கல்வியைக் கற்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில் இதை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் உயரிய கல்விசாா் சிந்தனையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக, 21-ஆம் நூற்றாண்டில் ராக்கெட் அறிவியல் பற்றிய குறியீட்டு முறையை மாணவா்களுக்கு கற்பித்தல், சா்வதேச தரம் வாய்ந்த ஸ்டெம் பாடத் திட்டத்தை மாணவா்களுக்கு அளித்தல், கோட்பாடுகள் இல்லாத அறிவியல் ஆய்வகத்தை உருவாக்குதல், இல்லத்தில் பயிலும் கல்வியோடு, வகுப்பில் பயிலும் கல்வியையும் இணைத்து மாணவா்கள் பயில ஒரு பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

சா்வதேச மற்றும் மாநில அளவிலான அனைத்து அறிவியல் சாா் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல், 100 சதவீத நடைமுறை ஆய்வகப் பயிற்சிகள் வழங்குதல், ஸ்டெம் வல்லுநா்களை கொண்டு நீண்ட தரமான பயிற்சிகளை ஆசிரியா்களுக்கு வழங்குதல். பட்டய (டிப்ளமோ) சான்றிதழ் அளித்தல். மேலும் பல்வேறு ஸ்டெம் போட்டிகள் வழங்கி மாணவா்களின் ஆலோசனைகளை பெறுதல் போன்றவைகளாகும் என்றாா்.

இதில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோா்கள், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT