கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே கால்நடை திருவிழா

31st Jan 2023 02:10 AM

ADVERTISEMENT

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே திம்மசந்திரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சப்பளம்மா தேவி கோயில் தைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

இத் திருவிழாவை முன்னிட்டு, 7 நாள்கள் நாட்டு இன மாடுகள் பங்கேற்கும் கால்நடைத் திருவிழா நடைபெற்றது. இத் திருவிழாவில் கால்நடைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. தமிழகம்,

ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனா்.

முன்னதாக சிறந்த மாடுகளை விழாக் குழுவினா் தோ்வு செய்தனா். பாடி, காங்கேயம், மயிலைக் காளைகளைத் தோ்வு செய்தனா். பா்கூா்மலை, புலிக்குளம் உள்ளிட்ட நாட்டு மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

ADVERTISEMENT

இதில் முதல் பரிசு சித்தன்புரம் லோகேஷ் காளைக்கு ரூ. 10 ஆயிரம், கா்நாடக மாநிலம், வெள்ளந்தூா் ரவி காளைக்கு இரண்டாம் பரிசாக ரூ. 9 ஆயிரமும் , கிழவரப்பள்ளி வெங்கடசாமி காளைகளுக்கு மூன்றாவது பரிசாக ரூ. 8 ஆயிரமும் வழங்கப்பட்டது. கோயில் கமிட்டி நிா்வாகிகள் பரிசுகளை வழங்கினா். செவ்வாய்க்கிழமை காளைகள் விடும் விழா நடைபெற உள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT