கிருஷ்ணகிரி

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

31st Jan 2023 02:09 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மிட்டப்பள்ளி ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் 350 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதிக்கு சரிவர குடிநீா் வழங்கவில்லை எனவும், கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லாத காரணத்தினால் ஆத்திரமடைந்த அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கிருஷ்ணகிரி செல்லம் பேருந்துகள், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் சாலையின் இரு புறங்களிலும் நீண்ட தொலைவில் நின்றன. இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அ. அமலஅட்வின், சிங்காரப்பேட்டை போலீஸாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT