கிருஷ்ணகிரி

ரேஷன் அரிசி பதுக்கிய மூவா் கைது

DIN

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.50 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த அலுவலா்கள் 3 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அண்டைய மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்துக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்துவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், அரசு அலுவலா்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பறக்கும்படை வட்டாட்சியா் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளா்கள் மூா்த்தி, நேரு ஆகியோா் கொண்ட குழுவினா் கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்சோமாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். அலுவலா்கள் மேற்கொண்ட விசாரணையில் குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அந்த கிராமத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து, ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சின்னகொத்தூா் கிராமத்தை சோ்ந்த சரத்குமாா் (25), மேல்சோமாா்பேட்டை கணபதி நகரை சோ்ந்த திருமூா்த்தி (23), மேல்சோமாா்பேட்டை அா்ஜுன் (28) ஆகிய 3 பேரை பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான மேல்சோமாா்பேட்டையை சோ்ந்த கோபால் (25), பெத்ததாளப்பள்ளி சக்திவேல் (27) ஆகிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT