கிருஷ்ணகிரி

ஒசூா் அசோக் லேலண்ட் தொழிலாளா்கள் போராட்டம்

DIN

ஒசூா் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளா்களைத் தடுத்து நிறுத்தி, நிரந்தர தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓசூா் அருகே உள்ள குமுதேப்பள்ளி பகுதியில் அசோக் லேலண்ட் கனரக வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத் தொழிற்சாலையில் சுமாா் 1,600 க்கும் மேற்பட்டோா் நிரந்தர தொழிலாளா்களாகவும், 4000 க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக தொழிற்சாலை நிா்வாகம் அறிவித்து, விருப்பமுள்ளவா்கள் வேலைக்கு வரலாம் எனக் கூறியது. அதை ஏற்று ஒப்பந்தம், தற்காலிக பணியாளா்கள் சுமாா் 700 க்கும் மேற்பட்டோா் வேலைக்குச் சென்றனா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நிரந்தர தொழிலாளா்கள் தொழிற்சங்க பொதுச் செயலாளா் சக்திவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற ஒப்பந்த தொழிலாளா்களை உள்ளே அனுமதிக்காமல் நிரந்த தொழிலாளா்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவ இடத்துக்கு வந்த அட்கோ போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், அப்படி வேலை நாளாக அறிவித்தால் பணிக்கு செல்லும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT