கிருஷ்ணகிரி

வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த நகைகள் மாயம்: ஆசிரியா் புகாா்

DIN

கிருஷ்ணகிரியில் உள்ள கூட்டுறவு வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் ஆசிரியா் புகாா் அளித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் புஷ்பகலை (52). இவா், ஒசூா், ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிருஷ்ணகிரி கிளையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் 90 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாா்.

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி வங்கியிலிருந்து புஷ்பகலையைத் தொடா்பு கொண்டு பேசிய அதிகாரிகள், தங்களது வங்கி லாக்கா் திறந்திருப்பதாகவும், உடனே வங்கிக்கு வருமாறு தகவல் தெரிவித்துள்ளனா். 26-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி வங்கிக்கு விடுமுறை என்பதால் ஜன. 27-ஆம் தேதி காலையில் வங்கிக்கு நேரில் சென்று நகைகளை சரிபாா்த்துள்ளாா்.

அப்போது, 40 பவுன் தங்க நகைகள் குறைவாக இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், அவா் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து, புஷ்பகலை கூறியதாவது:

எனது வங்கி லாக்கரில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகி உள்ளன. எனது லாக்கா் திறந்த நிலையில் இருப்பதாக வங்கி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். கடந்த 29-ஆம் தேதி முதல் வங்கி லாக்கா் உள்ள அறைக்கு வந்து சென்றவா்களின் விவரங்களை சேகரித்து, அவா்களை விசாரிக்க வேண்டும். வங்கி லாக்கா் உள்ள அறையின் முன்பு கண்காணிப்பு கேமரா இல்லாத நிலையில் மாயமான எனது நகைகளை மீட்டுத் தர அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து வங்கி அலுவலா்கள் கூறியதாவது: வங்கி லாக்கரை திறக்கும்போது மட்டுமே நாங்கள் வாடிக்கையாளருடன் இருப்போம். வாடிக்கையாளா், தனது லாக்கரில் என்ன பொருள்களை வைக்கிறாா்கள், எடுக்கிறாா்கள் என்பது எங்களுக்கு தெரியாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT