கிருஷ்ணகிரி

மாநில அளவிலான பேச்சுப் போட்டி:சூசூவாடி அரசு பள்ளி மாணவி முதலிடம்

28th Jan 2023 11:59 PM

ADVERTISEMENT

மாநில அளவில் பேச்சுப் போட்டியில் சூசூவாடி அரசுப் பள்ளி மாணவி அபித்துமனிஷா முதலிடம் பிடித்தாா்.

சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவிலான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளின் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டியில் சூசூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அபித்து மனிஷா வெற்றி பெற்றாா். அவருக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் சான்றிதழ் வழங்கினாா்.

அபித்து மனிஷா, பேகேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா். அவருக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கேடயத்தை ஊராட்சி மன்றத் தலைவா் சித்தா அருண் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT