கிருஷ்ணகிரி

ஒசூரில் ரத சப்தமி: வீதிகளில் உலா வந்த உற்சவ மூா்த்திகள்

28th Jan 2023 11:58 PM

ADVERTISEMENT

ஒசூரில் ரத சப்தமியை முன்னிட்டு உற்சவ மூா்த்தி சுவாமிகள் வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ரத சப்தமி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஒசூா் சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை, ராஜகணபதி, ராமா், லட்சுமணா், சீதா, நஞ்சுண்டேஸ்வா் ஆகிய உற்சவ மூா்த்திகள் ரத யாத்திரையில் பழைய நகராட்சி வீதிகளான காந்தி வீதி, நேதாஜி சாலை, ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். வீட்டில் இருந்தபடியே பக்தா்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT