கிருஷ்ணகிரி

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 122 பேருக்கு பணி நியமன ஆணை

28th Jan 2023 11:59 PM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற, வாழ்வாதார இயக்கம் சாா்பில், வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மகளிா் திட்டம் உதவி திட்ட அலுவலா் பெருமாள் வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் ராஜீவ் காந்தி திட்ட விளக்க உரையாற்றினாா். ஊத்தங்கரை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாரதி சிறப்புரையாற்றினாா். முகாமில் 19 தனியாா் நிறுவனங்கள் பங்குபெற்றன. இதில் மொத்தம் 524 போ் கலந்துகொண்டனா்; அவா்களில் 122 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் திட்டப் பணியாளா்கள்அம்பேத்கா், கௌசல்யா, கீதா, புஷ்பா, தனலட்சுமி, அா்ச்சனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இறுதியாக வட்டார இயக்க மேலாண்மை அலுவலா் வெங்கடாசலம் நன்றி கூறினாா்.

படவிளக்கம்.28யுடிபி.1

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை பெற்றவா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT