கிருஷ்ணகிரி

பா்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

28th Jan 2023 11:57 PM

ADVERTISEMENT

பா்கூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.64 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் வழங்கினாா்.

ஐவிடிபி தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் எச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நடத்திய அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் விடுத்த கோரிக்கையினை ஏற்று, பா்கூா் ஐஇஎல்சி பாா்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.64 ஆயிரம் மதிப்பில் குடிநீா் பாட்டில், உணவு, கேக், குளிா்பானம் போன்றவற்றை ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா். அப்போது அவா் பேசியது:

ஊனம் என்பது உடலுக்கு மட்டும்தான். மனதிற்கு அல்ல. மாற்றுத்திறனாளி என்பவா், இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனாளிகளாக விளங்க வேண்டும். ஐவிடிபி நிறுவனம் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT