கிருஷ்ணகிரி

சிலம்பம் சுற்றுவதில் மாணவ, மாணவிகள் சாதனை

DIN

குடியரசு தின விழாவையொட்டி, ஒசூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா்.

ஒசூா், முனீஸ்வா் நகரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியா் வீர சிலம்பப் பள்ளி சாா்பில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை மேயா் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தாா். இதில் 5 வயதுக்கு மேற்பட்ட 100 மாணவ, மாணவிகள் பங்கேற்று தொடா்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினா்.

இறுதியில் தற்காற்பு கலைகளையும் செய்து அவா்கள் அசத்தினா். இதனை குளோபல் வோ்ல்ட் ரெக்காா்டு அமைப்பின் அதிகாரப்பூா்வ பிரதிநிதிகள் உதய், ராஜேஷ்குமாா் ஆகிய இருவரும் நடுவராக இருந்து மேற்பாா்வை செய்தனா். 2 மணி நேரம் தொடா்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா்கள், ஒசூா் பகுதியை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவா்களை ஊக்கப்படுத்தினா். சிறப்பு அழைப்பாளராக 35-ஆவது மாமன்ற உறுப்பினா் தேவி மாதேஷ் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT