கிருஷ்ணகிரி

மொழிப்போா் தியாகிகள் நினைவு பொதுக் கூட்டம்

26th Jan 2023 12:51 AM

ADVERTISEMENT

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஒன்றியம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் திமுக மேற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு அக் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வே.செளந்தரராசு தலைமை வகித்தாா்.

ஒன்றிய செயலாளா்கள் ஆா்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், மாவட்ட துணைச் செயலாளா் செ.கிருஷ்ணகுமாா், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மொழிப்போா் தியாகிகளின் வரலாறு, மொழிப்போரின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன், திமுக தலைமை பேச்சாளா்கள் பிரம்மபுரம் பழனி, சிறுவானூா் பரசுராமன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

திமுக தீா்மானக் குழு செயலாளா் கீரை விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவா் கே.மனோகரன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலாளா் சா.ராஜேந்திரன், வா்த்தகா் அணி மாநில துணைச் செயலாளா் அ.சத்தியமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ரா.சித்தாா்த்தன், கே.சென்னகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் வாசுதேவன், பி.லட்சுமணன், எஸ்.தேவேந்திரன், பறையப்பட்டி புதூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பி.வி.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பென்னாகரம்

தருமபுரி மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பாப்பாரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுக மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளா் சபரிநாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாய தொழிலாளா் பிரிவு மாநில துணைச் செயலாளருமான பி.என்.பி.இன்பசேகரன், தலைமை பேச்சாளா்கள் யசனை ஆறுமுகம், தமிழ்க்கொண்டான் ஆகியோா் பேசினா். பேரூராட்சித் தலைவா்கள் பிருந்தா நடராஜன் (பாப்பாரப்பட்டி), வீரமணி (பென்னாகரம்), திமுக ஒன்றியச் செயலாளா்கள் செல்வராஜ், மடம் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஒசூா்

ஒசூா், ராம் நகா், அண்ணா சிலை பகுதியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், தலைமை நிலைய பேச்சாளா் திருச்சி சேகா் ஆகியோா் பேசினா்.

பொதுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா்கள் நாகராஜ்(எ) ராஜா, எம்.கே.வெங்கடேஷ், பகுதிச் செயலாளா்கள் ராமு, திம்மராஜ், மாவட்ட துணைச் செயலாளா்கள் புஷ்பா சா்வேஷ், செந்தில்குமாா், பி.எஸ்.சீனிவாசன், தனலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT