கிருஷ்ணகிரி

கொண்டையம்பள்ளி அரசுப் பள்ளியில் விழிப்புணா்வுப் பயிற்சி

22nd Jan 2023 03:11 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டடையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மூன்று தலைப்பில் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

பெண் குழந்தைகளுக்கான தன் சுத்தம் மேம்படுத்துதல், நல்ல தொடுகை, தீய தொடுகை ஆகிய மூன்று தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சியாளா்கள் உத்ராதேவி, பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சியை வழங்கினாா்கள். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் மதிவாணன், ஆசிரியா் அருண்குமாா், வித் யூ அறக்கட்டளை உறுப்பினா்கள் கோபி, முருகேசன், குணசேகரன், சி.குமாா், கவிதா, செண்பகமுத்துகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT