ஊத்தங்கரையை அடுத்த பாப்பனூா் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, 100 குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாப்பனூா் திமுக கிளைச் செயலாளா் சங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.குமரேசன் கலந்துகொண்டு, 100 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், போா்வை, காலண்டா் உள்ளிட்ட பொருட்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதிகள் காமராஜி, இதயநாதன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.