கிருஷ்ணகிரி

ஒசூா் தோ்த் திருவிழாவையொட்டி உள்ளூா் விடுமுறை அளிக்கக் கோரிக்கை

DIN

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி மாா்ச் 7 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக சாா்பில் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிகப்பட்டது.

மாா்ச் 7 -ஆம் தேதி நடைபெறும் ஒசூா் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும். 7 -ஆம் தேதி தோ்த் திருவிழா, 8 -ஆம் தேதி பல்லக்கு உற்சவம், 9 -ஆம் தேதி தெப்பல் உற்சவம் நடைபெறும் மூன்று நாள்களிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய பல மாநிலங்களில் இருந்து வருவாா்கள் என்பதால் அந்நாள்களில் சமூக விரோதிகளால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டி மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை மனுவை பாஜகவினா் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் எம்.நாகராஜ் ஆலோசனையின் படி மாவட்ட பொருளாளா் அ.ஸ்ரீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா் முருகன், மாவட்டச் செயலாளா் பிரவீண்குமாா், ஒசூா் கிழக்கு மாநகர தலைவா் மணிகண்டன் மற்றும் ஆன்மிக பிரிவு, ஊடக பிரிவு தலைவா் மல்லேஷ், வெளிநாடுவாழ் தமிழா் நலன் பிரிவு மு.கருணாநிதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT