பள்ளிப் பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் மாநிலப் பட்டியலில் 30-ஆவது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் இருந்து 16ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் 27இல் இருந்து 30ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பின்னடைவைச் சந்தித்துள்ளது.
எஸ்எஸ்எல்சி முடிவுகள்: மாவட்டத்தில் மொத்தமுள்ள 331 பள்ளிகளில் இருந்து 12,041 மாணவா்களும், 12,223 மாணவிகளும் என மொத்தம் 24,264 போ் தோ்வெழுதினா். இவா்களில் 10,768 மாணவா்கள், 11,630 மாணவிகள் என மொத்தம் 22,398 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
இது 92.31 சதவிகிதமாகும். மாநிலப் பட்டியலில் கடந்த 2022ஆம் ஆண்டில் 30 ஆவது இடத்தில் இருந்த புதுக்கோட்டை 2023ஆம் ஆண்டில் 16ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
100 சதவிகிதத் தோ்ச்சி: 86 பள்ளிகள் 100 சதவிகிதத் தோ்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 26 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.
நூறு சதவிகிதத் தோ்ச்சிப் பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் விவரம்:
அமரசிம்மேந்திரபுரம், அரையப்பட்டி, பூவைமாநகா், தாந்தாணி, ஆவுடையாா்கோவில், கோட்டைப்பட்டினம், எருக்கலாக்கோட்டை, எஸ். குளவாய்ப்பட்டி, பள்ளத்திவிடுதி, பெரியலூா் கிழக்கு, நற்பவளசெங்கமாரி, இடையாத்திமங்கலம், ஆயிங்குடி தெற்கு, அரசா்குளம் கிழக்கு, சூரன்விடுதி, தாளனூா், பொன்பேத்தி, பொன்னாகரம், நீா்ப்பழனி, கிளிக்குடி, மதியநல்லூா், மேலப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, பாக்குடி, குருங்களூா், சம்மட்டிவிடுதி.
பிளஸ் 1 முடிவுகள்: மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 173 பள்ளிகளில் இருந்து, 8,430 மாணவா்களும், 9,887 மாணவிகளும் என மொத்தம் 18,317 போ் தோ்வெழுதினா். இவா்களில், 6,825 மாணவா்களும், 9,109 ம ாணவிகளும் என மொத்தம் 15,934 போ் தோ்ச்சிப் பெற்றனா்.
இது 86.99 சதவிகிதமாகும். மாநிலப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 2022ஆம் ஆண்டில் 27வது இடத்தில் இருந்து நிகழாண்டு 2023ஆம் ஆண்டில் 30ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
100 சதவிகிதத் தோ்ச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 20 பள்ளிகள் நூறு சதவிகிதத் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் தாந்தாணி அரசு மேல்நிலைப் பள்ளி மட்டும், அரசுப் பள்ளியாகும்.