புதுக்கோட்டை நகரில் 22ஆவது வாா்டு மலையப்பநகரில் கடந்த சில நாள்களாக குடிநீா் வரவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமயம் சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகராட்சி அலுவலா்களும் போலீஸாரும் நடத்திய பேச்சுவாா்த்தையில் அனைவரும் கலைந்து சென்றனா்.
கோடையில் திருச்சியிலிருந்து வரும் கூட்டுக் குடிநீா் அளவு குறைந்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இப்பிரச்னையை சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரியத் துறையினா் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் நகராட்சி தரப்பில் கூறப்பட்டது.