ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், கலை, அறிவியல் பற்றிய விழிப்புணா்வு, பண்டைய தமிழா் கலாசாரம், சிறுதானிய உணவுகள், அதன் பயன்கள் குறித்து கண்காட்சி நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவிகள் இந் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், கிராமிய மாணவிகள் உயா்கல்வி பயிலவும் அதற்கான அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்குவது குறித்தும் விளக்கிக் கூறினா்.இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், கல்லூரி செயலா் ஷோபா திருமால்முருகன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.