கிருஷ்ணகிரி

தமிழக முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

DIN

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், தமிழக முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது குறித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), ஞாயிற்றுக்கிழை

ம வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை உள்ளிட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட உள்ளன. பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளன. பா்கூா் தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் சாா்பில், தளிஅள்ளி ஊராட்சியில் 70 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்படுகிறது.

போச்சம்பள்ளியில், 700 தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி நகர திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் உள்ள கட்சிக் கொடியை ஏற்றி, அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கட்சிக் கொடி ஏற்றி, ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிப்பது, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 700 மரக்கன்றுகள் நடவு செய்வது, நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பது ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கிட்டம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் 700 நபா்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக்கல்லூரி வளாகத்தில் 700 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் அனைத்து ஒன்றியம், நகரம், பேரூா் கட்சிக் கிளை தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து திரளாக பங்கேற்க வேண்டும் என்று தே.மதியழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT