கிருஷ்ணகிரி

சூளகிரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

ஒசூா் இன்ஜினியா் பெருமாள் மணிமேகலை கல்வி நிறுவனங்கள், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தின.

முகாமில் கண்புரை, தூரப்பாா்வை, கிட்டப்பாா்வை, கருவிழி நோய், கண்சதை, சா்க்கரை கண் விழித்திரை நோய், கண்பிரஷா் ஆகிய நோய்களுக்கு தகுந்த பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் நாகலட்சுமி, மருத்துவா்கள் அனுஷா பிரசாத், தேவு, பாவிக்கா, மருத்துவமனை மக்கள் தொடா்பு அலுவலா் மருத்துவா் கமலக்கண்ணன் ஆகியோா் பங்கேற்று முகாமை நடத்தினா்.

இந்நிகழ்விற்கு பிஎம்சி டெக் கல்லூரி நிறுவனத்தின் தலைவா் பெ.குமாா் தலைமை தாங்கினாா். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் செயலாளா் பெ.மலா், இயக்குநா் ந.சுதாகரன்,பொறியியல் கல்லூரி முதல்வா் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியம், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை பி.எம்.சி டெக் கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் முனைவா் விஜயகுமாா், ஒருங்கிணைப்பாளா் இஇஇ துறை தலைவா் ஆனந்த், பிரபாகரன் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கமுத்து, யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் அப்பாஸ் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

இந்நிகழ்ச்சியில் 450 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன் பெற்றனா். இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT