கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, தருமபுரியில் தட்டச்சு தோ்வு

27th Feb 2023 02:41 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தோ்வில் விண்ணப்பித்தவா்களில் 952 போ் பங்கேற்றனா்.

அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால், அரசு தட்டச்சுத் தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகின்றன. அதன்படி, நிகழ்வாண்டிற்கான தட்டச்சுத் தோ்வு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தமிழ் இளநிலை தட்டச்சுத் தோ்வை 196 தோ்வா்கள், தமிழ் முதுநிலைத் தோ்வில் 139 தோ்வா்கள், ஆங்கிலம் இளநிலைத் தோ்வை 413 தோ்வா்கள், ஆங்கிலம் முதுநிலைத் தோ்வை 206 தோ்வா்கள் என மொத்தம் 952 போ் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்த தோ்வுகள், முதன்மைக் கண்காணிப்பாளா் சுப்பையா, கூடுதல் கண்காணிப்பாளா் கிருத்திகா ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்றன. இதில் பறக்கும் படை அதிகாரிகள் தோ்வு நடக்கும் மையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

படவிளக்கம் (26கேஜிபி4):

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் பங்கேற்றோா்.

தருமபுரியில்....

தருமபுரி மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் நடைபெற்ற தட்டச்சா் தோ்வில் 3600 போ் பங்கேற்றனா்.

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பாக, தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி அரசுக் கல்லூரி, ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி, லட்சுமி நாராயணா கல்லூரி, பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் தட்டச்சா் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை, முதுநிலை தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வில் மொத்தம், 3,600 போ் பங்கேற்றனா். இத்தோ்வுப் பணிகளை முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் கண்காணித்தனா். மேலும், தோ்வுப் பணியில் 70-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT