கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நில அளவையா்கள் தா்ணா போராட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவைஅலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில், 26 கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமைநேர தா்ணா போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமைதாங்கினாா். கோட்டத் தலைவா் கோவிந்தராஜன் வரவேற்றாா். மாவட்ட செயலாளா்பிரகாஷ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கமாவட்டத் தலைவா் சந்திரன், பொது சுகாதார அலுவலா் சங்க மாநில துணைத்தலைவா் தினேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட பொருளாளா் மோகன்நன்றி கூறினாா்.தா்ணா போராட்டத்தில், களப்பணியாளா்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.நில அளவை சாா்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவுபட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிடவேண்டும். கடுமையான பணிச்சுமையுடன் வேலை பாா்க்கும் நில அளவா்கள் முதல்உதவி இயக்குனா்கள் வரை நிலுவை மனுக்களை காரணம் காட்டிஏற்படுத்தப்பட்டுள்ள குற்றக் குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைகைவிட வேண்டும். நில அளவா் முதல் கூடுதல் இயக்குனா் வரை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இந்த ஆண்டு குறுவட்ட அளவா்களாகபதவி உயா்வு பெற உள்ள நில அளவா்களுக்கு பாதிப்பு இல்லாமல், ஏற்கனவே நிலஅளவா்களாக ஒரு முறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியை மீள தரம்உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். படவரி... மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவையா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT