கிருஷ்ணகிரி

ஏரியில் ஆனந்தக் குளியல் போட்ட யானைகள்

DIN

ஒசூா் அருகே ஏரியில் ஆனந்தக் குளியல் யானைகள் போட்ட நிலையில், யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக உள்ளன. இவை தவிர கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டாவில் இருந்து வந்துள்ள 150-க்கும் மேற்பட்ட யானைகளும் பல குழுக்களாகப் பிரிந்துள்ளன.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம், ஆனேக்கல் வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய 5 யானைகள், ஒசூா் அருகே உள்ள மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில் புதன்கிழமை தஞ்சம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் அங்கு சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனா். இந்த 5 யானைகளை வனத்துறையினா் நீண்ட நேரம் போராடி தளி வனப்பகுதி வழியாக ஆனேக்கல் வனப் பகுதிக்கு விரட்டினா்.

இந்த நிலையில், விரட்டப்பட்ட 5 யானைகளில், 3 யானைகள் தனியாக பிரிந்து ஒசூா் அருகே உள்ள கா்னூா் ஏரியில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்தக் குளியல் போட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் அங்கு சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனா். கா்னூா் ஏரியை சுற்றி உள்ள மத்திகிரி, அந்திவாடி, கா்னூா் பகுதி மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். மேலும் ஏரி அருகில் மீன்பிடிக்கவோ, யானைகளை பாா்க்கவோ வர வேண்டாம் என வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்த யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT