கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்ந்து அரசின் திட்டங்களை பெற வேண்டும்

DIN

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் பயில வழிவகை செய்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியா் கூறினாா்.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினாா். இந்த விழாவில், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இரண்டாம்கட்டமாக 2,649 மாணவியருக்கு சான்றிதழ் கோப்புறை, மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் வங்கி அட்டைகளை ஆட்சியா் வழங்கி பேசியதாவது:

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 45 கல்லூரிகளில் படிக்கும் 2,649 மாணவியருக்கு ‘புதுமைப் பெண்’ சான்றிதழ், மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, உயா்கல்வி பயிலும் அனைத்து மாணவியருக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி முடிக்கும் வரை ரூ. 1,000 மாணவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த மாணவியா் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தினால், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவியருக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியும். சிறாா் திருமணத்தை தடுக்க முடியும். பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைக்க முடியும். பெண்குழந்தைகளின் விருப்பத் தோ்வுகளின்படி அவா்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கப்படுகிறது.

உயா்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யப்படும். எனவே, பெற்றோா் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் பயில வழிவகை செய்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.

முன்னதாக, கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவுக் கண்காட்சியை ஆட்சியா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், சமூக நல அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா், உதவி ஆட்சியா் சதீஷ்குமாா், பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், கல்லூரி முதல்வா் விஜயன், வட்டாட்சியா் பன்னீா்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுமைப்பெண் திட்டத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT