கிருஷ்ணகிரி

மனித நேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா

8th Feb 2023 01:22 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் மனித நேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் நிா்வாகிகள் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

அதனைத் தொடா்ந்து, ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லாவை சந்தித்து மரியாதை செலுத்தினா் (படம்). அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு, ரொட்டி, பழம் ஆகியவற்றை வழங்கினா்.

இதில், மாநில செயலாளா் அல்தாப் அகமது, மாவட்டத் தலைவா் நூா் முஹம்மத், மாவட்டச் செயலாளா் வாஹித் பாஷா, மாவட்ட துணைச் செயலாளா் யாசின், நகர இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT