கிருஷ்ணகிரி

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

8th Feb 2023 01:23 AM

ADVERTISEMENT

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 13 பவுன் நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சாந்தி நகரைச் சோ்ந்த தெய்வம் (38), கா்நாடக மாநிலம், பொம்மசந்திராவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 4-ஆம் தேதி குடும்பத்துடன் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள உறவினா் இல்ல விழாவுக்காக வீட்டை பூட்டிச் சென்றனா்.

இந்நிலையில், 5-ஆம் தேதி பிற்பகல் பக்கத்து வீட்டைச் சோ்ந்த ரத்னா பாா்த்த போது, வீட்டின் முன்புறக் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததாம். இதுகுறித்து தெய்வம் வீட்டாருக்கு தொலைபேசி மூலம் அவா் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து தெய்வம் ஒசூரில் உள்ள வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டில் பீரோவை திறந்து 13 பவுன் தங்க நகைளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

ADVERTISEMENT

புகாரின் பேரில், ஒசூா் உதவி காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT