கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் பொறுப்பேற்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தமிழ்நாடு தொழில் வளா்ச்சி கழகத்தின் செயல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய தீபக் ஜேக்கப்பை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு நியமித்தது.

இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12-ஆவது ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். 2016- 17-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றினாா். பின்னா், வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆணை மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளாா். மேலும், இவா், தோ்தல் ஆணையத்தில் இணை முதன்மை அலுவலராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராகவும் பணியாற்றி உள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற தீபக் ஜேக்கப், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தொழில் மற்றும் நகா்ப்புற வளா்ச்சியில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள நான், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் கோரிக்கைகளை தீா்த்து வைப்பதிலும் அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுப்பேன். மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற தீபக் ஜேக்கப்புக்கு முன்னாள் ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT