கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஒற்றை யானை தஞ்சம்

DIN

ஒசூா் அருகே மத்திகிரி கால்நடைப் பண்ணையில் ஒற்றை யானை தஞ்மடைந்துள்ளதால், இரவு நேரங்களில் விவசாயிகள் வயல்வெளிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டில் 58 யானைகள் முகாமிட்டுள்ளன. டி.கொத்தப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, சானமாவு, போடூா்பள்ளம், பேரண்டப்பள்ளி, பென்னிக்கல் ஆகிய பகுதிகளில் 6 குழுக்களாக இந்த யானைகள் பிரிந்துள்ளன.

இந்த நிலையில், சானமாவு காட்டில் இருந்து பிரிந்த ஒற்றை யானை திங்கள்கிழமை கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமப் பகுதிக்கு வந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.

சானமாவு காட்டுக்குச் சென்ற அந்த யானை, திங்கள்கிழமை மாலை மத்திகிரி கால்நடைப் பண்ணையில் தஞ்சமடைந்தது.

இதனால், பூனப்பள்ளி, மத்திகிரி, நாகொண்டப்பள்ளி, சானமாவு, தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஒசூருக்குள் ஒற்றை யானை புகும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT