கிருஷ்ணகிரி

ஒசூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு ரூ.517 கோடி ஒதுக்கீடு: மேயா் எஸ்.ஏ.சத்யா

DIN

ஒசூா் மாநகராட்சியில், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த, ரூ. 517 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில், 45 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் கழிவுநீா் கால்வாய் வசதி முறை யாக இல்லை. இதனால், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். ஏற்கனவே ஆய்வுப் பணிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு நீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் உட்பட ரூ. 574.96 கோடி திட்ட செலவு மதிப்பிடப்பட்டது. இந்நிலையில் ரூ.516.85 கோடி தற்போது ஒதுக்கப்பட்டு, அரசு சாா்பில் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

இந்த நிதியில் ரூ.170.56 கோடி மத்திய அரசு மூலமும் ரூ.155.06 கோடி தமிழக அரசு மூலமும் ரூ. 249.34 கோடி ஒசூா் மாநகராட்சி மூலமும் ஒதுக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீடு முடிந்த நிலையில், டெண்டா் பணி விரைவில் துவங்கவுள்ளது என மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT