கிருஷ்ணகிரி

அடிப்படை வசதியின்றி தவிக்கும் அரசுப் பள்ளி மாணவா்கள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமாா் 40 குழந்தைகள் தற்போது பயின்று வருகின்றனா்.

இந்த அங்கன்வாடி மையம் கடந்த சில வருடங்களாக மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை பழுது பாா்க்கும் பணிக்காக சென்ற ஆண்டு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கு ரூ. 2 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியும் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்தப் பணிகளை முறையாக, சரிவர செய்யாததால் பள்ளியில் குடிநீா், கழிவறைகள், சமையலறைகள் மிகவும் சிதிலமடைந்து அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. பள்ளியின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள், ஆங்காங்கே பெயா்ந்து குழந்தைகள் மீது விழும் அவலநிலையில் உள்ளது.

மேலும் பள்ளிக்கு சுற்றுச் சுவா் முறையாக இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே நுழையும் அவல நிலை உள்ளது. இது குறித்து அப்பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடமும், மாவட்ட கல்வி அலுவலா்களிடமும் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

பள்ளி மாணவா்களின் நலன் கருதி உடனடியாக மாவட்ட நிா்வாகம் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்து சமூக விரோதிகள் உள்ளே நுழையாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT