கிருஷ்ணகிரி

தென்னை விவசாயிகளுக்கு புழு ஒட்டுண்ணி தயாரிக்கும் பயிற்சி அளிப்பு

5th Feb 2023 01:48 AM

ADVERTISEMENT

 

நரிமேடு கிராமத்தில், தென்னை விவசாயிகளுக்கு புழு ஒட்டுண்ணி தயாரிக்கும் பயிற்சியை வேளாண் கல்லூரி மாணவிகள் அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த நரிமேடு கிராமத்தில் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் அபூா்வா, ஆஸ்ரிதா, தனலட்சுமி, மாலதி, பிரியங்கா, ரிலா சித்தாரா, ஸ்ரீராஜலட்சுமி, சுபலட்சுமி, சுவாதி, தரணி ஸ்ரீ, வா்ஷினி அகியோா் ஊரக வேளாண்மைப் பயிற்சி அனுபவத்திற்காக முகாமிட்டுள்ளனா்.

இந்த மாணவிகள், நரிமேடு கிராமத்தில், தென்னை விவசாயிகளிடம் பிரகானிட் ஒட்டுண்ணியைத் தயாரிக்கும் முறை மற்றும் அதனை தென்னை மரங்களில் எவ்வாறு விட வேண்டும் என்பது குறித்து அங்குள்ள மக்களுக்கு பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

பிரகானிட் ஒரு முக்கியமான புழு ஒட்டுண்ணி ஆகும். தென்னையில் மிக பாதிப்பு ஏற்படுத்தும் கருந்தலை புழுவை கட்டுப்படுத்த, பிரகானிட் என்ற புழு ஒட்டுண்ணி பயன்படுத்தப்படுகிறது. காா் சயிரா புழுக்களைக் கொண்டு, 52 நாள்களில் இந்த பிரகனட் தயாரிக்கப்படுகிறது.

தென்னைக் கருந்தலைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒரு முறை மரத்திற்கு 20 பிரகானிட் ஒட்டுண்ணிகள் என ஏக்கருக்கு 800 ஒட்டுண்ணிகள் வீதம் தேவை. இது போன்று கருந்தலைப்புழு பருவத்தில் 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை பிரகானிட் ஒட்டுண்ணியை விட்டு நல்ல பலன் பெறலாம் என பயிற்சி அளித்து விளக்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT