கிருஷ்ணகிரி

பா்கூரில் ரூ.1.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

5th Feb 2023 01:47 AM

ADVERTISEMENT

 

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.1.66 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை தே.மதியழகன் எம்எல்ஏ, சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பேராசிரியா் க.அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.35.52 கோடி மதிப்பில் 102 பள்ளிக் கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குருவிநாயனப்பள்ளி, பெலவா்த்தி, அழகியபுதூா், குண்டியல்நத்தம், மரிமானப்பள்ளி, மல்லப்பாடி ஆகிய 6 இடங்களில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணி தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி, பல்வேறு இடங்களில் நடைபெற்ற பள்ளி கட்டடம் கட்டும் பணிகளை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தொடங்கி வைத்தாா். அப்போது, திமுக மாவட்ட அவைத்தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளா் கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினா் அஸ்லம், ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT