கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பிப். 7-இல் முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரியில் பிப். 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி 27-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளன.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் (2022- 23) பிப். 7 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாக மைதானத்தில் நடைபெறுகிறது. அதன்படி 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பிப். 7 முதல் 10-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு கபடி, சிலம்பம் (கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வால் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டைகம்பு வீச்சு), தடகளம் (100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 110 மீ., மற்றும் 100 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்), இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

17 முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிப். 13, 14 ஆகிய தேதிகளில் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 110 மீ., 100 மீ., தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்), கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேஜைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது.

15 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் பிப். 22, 23 ஆகிய தேதிகளில் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ., 1500 மீ (பெ), 3000 மீ., குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்), இறகுப்பந்து, கையுந்து பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன. அரசு ஊழியா்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) வரும் 24-ஆம் தேதி கபடி, தடகளம் (100 மீ., 1500 மீ., 3000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்), இறகுப்பந்து, கையுந்து பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) பிப். 27-ஆம் தேதி 50 மீ ஓட்டம், இறகுப்பந்து-5 போ், பாா்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், அடாப்டட் வாலிபால், மனவளா்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள பெயரினை பதிவு செய்துள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக போட்டி நடைபெறும் தேதியினை அறிந்து கொள்ளலாம். போட்டிகள் தொடா்பான இதர விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703487 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT