கிருஷ்ணகிரி

உலக ஈரநில நாள் விழிப்புணா்வு பேரணி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வனச் சரகத்திற்கு உட்பட்ட, நெல்லி வாசல் வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் உலக ஈரநில நாள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் (கூடுதல் பொறுப்பு) பிரின்ஸ் குமாா் உத்தரவின் பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரகா் பெ.ரமேஷ் தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி நடந்தது. நெல்லி வாசல் பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கையில் பதாகைகளை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், வனத்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து உலக ஈர நில நாள் குறித்து கட்டுரை, பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT