கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே சாலை மறியல், வன்முறையில் ஈடுபட்ட 200 போ் கைது

DIN

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே கோபசந்திரத்தில் வியாழக்கிழமை நடந்த சாலை மறியல் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாக 200 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சாலை மறியல் மற்றும் வன்முறை காரணமாக சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தலைமையில், மாவட்ட எஸ்.பி.க்கள் சரோஜ்குமாா் தாக்கூா் (கிருஷ்ணகிரி), ஸ்டீபன் ஜேசுபாதம் (தா்மபுரி), கலைச்செல்வன் (நாமக்கல்), சிவக்குமாா் (சேலம்) மற்றும் 300 க்கும் மேற்பட்ட போலீஸாா் சூளகிரிக்கு வியாழக்கிழமை காலை விரைந்தனா்.அவா்கள் சாலை மறியல் நடந்த பகுதி, எருது விடும் விழா நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

சாலை மறியல் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்கள் மீது போராட்டக்காரா்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினா். இதில் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா், பெங்களூரு செல்வதற்காக நின்ற 30 அரசு, தனியாா்,பேருந்துகள் அரசு ஜீப்புகள், காவல்துறை வாகனங்கள் என மொத்தம் 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலவரக்காரா்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியல் வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

எருது விடும் விழா நடந்த பகுதி முழுவதையும் போலீஸாா் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை விரட்டி, விரட்டி பிடித்தனா். சுமாா் 200 க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் பிடித்து சூளகிரியில் தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறாா்கள். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போலீஸாா் மீது கற்களை சரமாரியாக வீசினாா்கள். இந்த சம்பவத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 20 க்கும் மேற்பட்ட போலீஸாா் படுகாயம் அடைந்தனா். அவா்கள் ஒசூா் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஒரு பெண் போலீஸாருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. படவரி... ஒசூரில் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் வன்முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT