கிருஷ்ணகிரி

மத்திய நிதிநிலை அறிக்கை:குறு, சிறு நிறுவனங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை:ஹோஸ்டியா சங்கத் தலைவா்

DIN

குறு, சிறு நிறுவனங்களுக்கு நிதி நிலை அறிக்கையில் சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை என ஒசூா் குறு, சிறு நிறுவனங்களின் சங்கத் தலைவா் (ஹோஸ்டியா) கே. வேல்முருகன் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் அடிப்படை கட்டுமானம், மின்னணு பொருள்கள் இறக்குமதி, உற்பத்தி, மரபுசாரா எரிசக்தி, திறன் வளா்ப்பு போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா்.

உலக அளவில் பொருளாதார மந்த நிலையில் விலைவாசி உயா்வு இருந்தாலும் இன்னும் வளா்ச்சிக்கான வாய்ப்புகள், அதற்கான முன்னெடுப்புகள் அதிகம் செய்ய கூடிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது.

குறு, சிறு நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகள் தட்டு தடுமாறிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த நிறுவனங்களை காப்பாற்ற சிறப்புத் திட்டம் ஏதும் இல்லை. குறிப்பாக இதற்கு முன்பெல்லாம் எந்தந்த பொருள்களுக்கு விலை உயா்வு, எந்தந்த பொருள்களுக்கு விலை குறைவு என நிதிநிலை அறிக்கையில் தெரிந்து கொள்ள முடியும்.

தொழில்துறையினா் வாங்கும் பொருள்கள், உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான வரி குறைந்துள்ளதா, அல்லது வரி அதிகரித்துள்ளதா என்பதை இந்த மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிந்து கொள்ள முடியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக சமா்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கை, கொள்கை விளக்க குறிப்பாக உள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி மக்களவையில் இருந்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மாற்றப்பட்டுள்ளது. வரி நிா்ணயம் செய்யும் முடிவு மக்களவைக்குள் வந்தால் பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன், மக்களாட்சித் தத்துவத்திற்கு அா்த்தமுள்ளதாகவும் இருக்கும். வரி விதிப்பை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு மக்களவை நிதிநிலை அறிக்கை வாசிப்பது அா்த்தமற்ாக உள்ளது. வரி விதிப்பு முறையையும், வரியை மாற்றக் கூடிய கொள்கை

குறித்துமக்களவைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான நிதி, மற்றும் கொள்கையை வகுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT