கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே வனப்பகுதியில் 18 யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

DIN

ஒசூா் அருகே போடூா்பள்ளம் அருகில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் 4 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானை சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளன. இந்த யானைகள் போடூா்பள்ளம் அருகில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அதிகாலை நேரங்களில் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடுகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து நாயக்கனப்பள்ளி கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த யானைகள்,அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் செடிகளை தின்றும் கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன.

கடந்த இரண்டு நாள்களாக வனப் பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

இதைப் பாா்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியா்கள் பட்டாசு வெடித்து அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனா்.

இதனால் அந்தப் பகுதியில் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் பணப்பயிா்கள் பயிரிடப்பட்டு வருவதால் இந்தப் பயிா்களை ருசி கண்ட காட்டு யானைகள் ஒவ்வொரு வருடமும் நவம்பா் டிசம்பா் மாதங்களில் வந்து பிப்ரவரி வரை தங்கி சேதப்படுத்தி வருகின்றன. தென்பெண்ணை நதி வற்றாத ஜீவநதியாக இருப்பதால் மூன்று போக சாகுபடி செய்யப்பட்ட வருகிறது.

அதிகமாக இந்த பகுதியில் முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், பூசனிக்காய் உள்ளிட்ட நெற்பயிா்கள் பயிரிடப்படுகின்றன.

ஒவ்வொருவருடமும் சரியான நேரத்திற்கு வந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. உடனடியாக இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT