கிருஷ்ணகிரி

மா விவசாயிகளுக்கு நாளை பயிற்சி தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களைச் சோ்ந்த மா விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் பிப். 2 முதல் 10-ஆம் தேதி வரையில் மா சாகுபடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் சுவையானதாக உள்ளதால் வெளிமாநிலங்களுக்கும் ஓமன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இம் மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளில் பெங்களூரா, அல்போன்ஸா போன்ற மாம்பழங்களில் இருந்து மாங்கூழ் தயாா் செய்யப்பட்டு உள்ளூா் சந்தை தேவையை நிறைவு செய்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாம்பழ நகரம் என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். பருவ நிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனா். குறிப்பாக சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மா சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எனவே, பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து மா மகசூலைப் பாதுகாக்கும் வகையில் பா்கூா், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூா், ஊத்தங்கரை ஆகிய 6 வட்டாரங்களில் பிப்.2 முதல் 10-ஆம் தேதி வரை தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சி வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விவரங்களை மாவட்ட விவசாயிகள், சம்பந்தப்பட்ட தோட்டக்கலை வட்டார அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயிற்சியில் பங்கு பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

SCROLL FOR NEXT