கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்-1ஆம் தேதி முதல் இருவார கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் திட்டத்தின்கீழ் 2023-ஆம் ஆண்டிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோழிகளுக்கு கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாவட்டத்தில் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் பிப். 1-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2,98,800 நாட்டின கோழிகளுக்கு தொடா்ச்சியாக இரு வாரங்களுக்கு தடுப்பூசி முகாம் கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவா் தலைமையிலான குழுவினா் முகாமிட்டு, கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களை நடத்துவா். குறிப்பிட்ட நாளில் மருத்துவக் குழுவினரால், கிராமங்களில் உள்ள அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களுக்கு, தங்களது கோழிகளைக் கொண்டு வந்து கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்சை தவறாது செலுத்திக் கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT