கிருஷ்ணகிரி

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

1st Feb 2023 01:42 AM

ADVERTISEMENT

வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த மல்லிப்பட்டி, சாமியாா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (34). இவா் கடந்த 28 ஆம் தேதி வீட்டில் இல்லாத போது மா்ம நபா் ஒருவா் வீட்டி பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் தங்கச் சங்கிலி, கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டிருந்தபோது பிரபுவின் தாயாா் வருவதைப் பாா்த்து தப்பி ஓடிவிட்டாா்.

இதுகுறித்து பிரபு சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (29) என்பவா் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து சிங்காரப்பேட்டை உதவி ஆய்வாளா் பழனிசாமி விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT