கிருஷ்ணகிரி

பேருந்து கண்ணாடியை உடைத்த மூவா் கைது

1st Feb 2023 01:43 AM

ADVERTISEMENT

சிங்காரப்பேட்டை அருகே மதுபோதையில் அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி பிரிவு சாலையில் இளைஞா்கள் மூவா் மதுபோதையில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில், திருவண்ணாமலையிலிருந்து வந்த அரசு பேருந்து மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்துள்ளனா்.

இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பழனிவேல் ( 44) சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டாா். இதில் சிங்காரப்பேட்டை, கென்னடி நகா் பகுதியைச் சோ்ந்த விஜயபிரகாஷ் (24). நவீன்ராஜ் (23), புருஷோத் (19) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT