கிருஷ்ணகிரி

படப்பள்ளி மகா மாரியம்மன் கோயில் திருவிழா

1st Feb 2023 01:41 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 18 ஆடுகளை பலியிட்டு விருந்து வைக்கும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

படப்பள்ளி கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வந்தது. கரோனா தொற்று காரணமாக திருவிழா தடைபட்டது. இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருந்ததால் படப்பள்ளி, பட்டகானூா், பெருமாள்குப்பம், சரட்டூா் ஆகிய கிராம மக்கள் ஒன்று கூடி, மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பூஜைகள் செய்தனா். இதனைத் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, மகா மாரியம்மனுக்கு 18 ஆடுகளை பலியிட்டு விருந்து வைத்தனா். இதில் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து விருந்து சாப்பிட்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT