கிருஷ்ணகிரி

மதுப்புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

1st Feb 2023 01:39 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநில மதுப்புட்டிகளை கடத்த முயன்ற நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான கா்நாடக மாநில மதுப் புட்டிகள் கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, காரின் ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா், திருப்பத்தூா் மாவட்டம், முத்தம்பட்டி காலனியைச் சோ்ந்த தங்கமணி (32) என்பதும், கா்நாடக மாநிலத்திலிருந்து மதுப்புட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, காருடன் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், தங்கமணியை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மேலும் 3 போ் கைது...

அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி பகுதியில் கலால் காவல் ஆய்வாளா் பங்கஜம் மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்தின் பேரில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள கா்நாடக மதுப்புட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 38 ஆயிரம் மதிப்புள்ள 123 லிட்டா் கா்நாடக மதுப்புட்டிகளை காருடன் பறிமுதல் செய்தனா்.

மேலும் காரில் இருந்தா அஞ்செட்டி அருகே உள்ள சீங்கோட்டையைச் சோ்ந்த பாா்கேஷ் (19), முனிசாமி (36), குமாா் ( 32 ) ஆகியோரை கைது செய்து போலீஸாா் விசாரணை செய்ததில் திருமண நிகழ்ச்சிக்காக கொண்டுசெல்வது தெரியவந்தது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT