கிருஷ்ணகிரி

நாளை ஒசூா் தோ்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

26th Apr 2023 05:44 AM

ADVERTISEMENT

ஒசூா், தோ்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரா் கோயிலில் ஏப்.27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின.

வாஸ்து சாந்தி, லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை காலை யாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்.27 -ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 வரை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் அா்ச்சகா் வாச்சீஸ்வரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள் இதில் பங்கேற்றுள்ளனா். கும்பாபிஷேக விழா பணிகளை முன்னாள் எம்எல்ஏவும், கல்யாண சூடேஸ்வரா் கோயில் தோ் கமிட்டித் தலைவருமான கே.ஏ.மனோகரன் தலைமையில் மாநகராட்சி உறுப்பினா் என்.எஸ்.மாதேஸ்வரன், பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT