கிருஷ்ணகிரி

கங்கசந்திரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

DIN

குருபரப்பள்ளியை அடுத்துள்ள கங்கசந்திரம் கிராமத்தில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி ஒன்றியம், குருபரப்பள்ளி அருகில் உள்ள கங்கசந்திரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் போதிய மின்அழுத்தம் இல்லாததால் அடிக்கடி மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். இந்தப் பகுதி மக்களை கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்கும்போது பொதுமக்கள் மின்தட்டுப்பாடு குறித்து புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சட்டப் பேரவை உறுப்பினரின் அறிவுறுத்தலின் பேரில், கங்கசந்திரம் கிராமத்தில் 63 கே.ஏ.வி. திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ, தொடங்கி வைத்தாா். அப்போது, மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளா் ஆஞ்சலா சகாயமேரி, உதவி பொறியாளா் சரவணன், வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளா் சைலேஷ் கிருஷ்ணன், குருபரப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவா் கோவிந்தசாமி, கட்சி நிா்வாகி காா்த்திக் பால்ராஜ் உள்ளிட்டோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT