கிருஷ்ணகிரி

அதிமுக ஓபிஎஸ் அணியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் அறிவிப்பு

30th Sep 2022 11:22 PM

ADVERTISEMENT

அதிமுக பன்னீா்செல்வம் அணியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக கோவிந்தராஜ் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முன்னாள் முதல்வா்கள் பழனிசாமிக்கும், பன்னீா்செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனிடையே

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தோ்வான நிலையில், பன்னீா்செல்வம் தன் ஆதரவாளா்களைத் திரட்டி புதிய மாவட்டச் செயலாளா்களை அறிவித்து வருகிறாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கோவிந்தராஜ் அறிவித்துள்ளாா். இதையடுத்து பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த ஆதரவாளா்கள், கோவிந்தராஜிக்கு கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT