கிருஷ்ணகிரி

பிடிஓ மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் பாஜகவினா் மனு

30th Sep 2022 11:23 PM

ADVERTISEMENT

சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினா் மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் எம்.நாகராஜ், பாஜக மாநில செய்தித் தொடா்பாளரும், மாவட்ட பாா்வையாளருமான நரசிம்மன் ஆகியோா் அளித்த மனுவில், பத்தலப்பள்ளி மொத்த காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு தொடா்ந்து இடையூறு செய்வதாகவும், அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வா்கள் குற்றம்சாட்டியுள்ளனா். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்துள்ளாா்.

பாஜக மாவட்ட பொதுச்செயலாளா்கள் அன்பரசன், மனோகா், மாவட்ட பொருளாளா் அ.சீனிவாசன் மாவட்ட துணைத் தலைவா்கள் முருகன், ராஜன்னா, மாவட்டச் செயலாளா்கள் ரஜினி முருகன் , அ.பாா்த்திபன், ஆனந்த், விவசாயிகள் உள்பட பலா் ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்க உடன் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT