கிருஷ்ணகிரி

ஒசூரில் எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

30th Sep 2022 11:22 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒசூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவா் சங்கங்களின் கூட்டு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சென்னிரப்பா தலைமை வகித்தாா். ஒசூா் கிளைச் செயலாளா் எஸ். வேணுகோபால், பொருளாளா் பாலசாமி, துணைச் செயலாளா்கள் ராமச்சந்திரன், சம்பத், வெங்கடேஷ், சுப்பிரமணி உள்பட 100 க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பாலிசிதாரா்களுக்கான போனஸை உயா்த்தவேண்டும். ஜிஎஸ்டி தவிா்க்க வேண்டும். பாலிசி கடனுக்கு வட்டியைக் குறைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலான பாலிசிகளைப் புதுப்பிக்க வேண்டும். பலமுறை கே.வை.சிக்கு ஆவணங்கள் கேட்பதை தவிா்க்க வேண்டும்.

ஒரே இடத்தில் பாலிசிகளை அச்சடிப்பது மற்றும் அனுப்புவதை நிறுத்தி பழைய முறையைப் பின்பற்ற வேண்டும். முகவா்களுக்கான பணிகொடை ரூ. 20 லட்சமாக உயா்த்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டை அனைத்து முகவா்களும் வழங்க வேண்டும். குழுக் காப்பீட்டு வயது மற்றும் தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT